Skip to main content

வாகை சூடிய வாழை... மூன்று நாள் வசூல் நிலவரம் என்ன?

ஆகஸ்ட் 23 ஆம் தேதி வாழை, கொட்டுக் காளி, போகுமிடம் வெகுதூரமில்லை, ஜாலா, அதர்ம கதைகள் ஆகிய ஐந்து நேரடி தமிழ்படங்கள் வெளியானது.

ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியான தங்கலான்  குறைக்கப்பட்ட திரையரங்குகளில்இரண்டாவது வாரத்தை தொடர்ந்தது. டிமான்டி காலனி-2  அதிகரிக்கப்பட்ட திரையரங்குகளில் இரண்டாவது வாரத்தில் வசூலை குவித்து வரும் சூழலில் புதிய படங்களுக்கு குறைவான திரையரங்குகளே கிடைத்தது.

ஐந்து நேரடி தமிழ் படங்கள் வெளியானாலும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் டிமான்டி காலனி-2, வாழை, தங்கலான், கொட்டு காளி ஆகிய நான்கு படங்கள் மட்டுமே மேற்குறிப்பிட்ட வரிசையில் முன்னிலை பெற்றன.

காட்சிகளும், வசூலும் இருமடங்கு ஆனது!

ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான வாழை முதல் நாள் 1.15 கோடி ரூபாய், இரண்டாம் நாள் 2.50 கோடி ரூபாய் மூன்றாம் நாள் 2.75 கோடி ரூபாய் என மொத்த வசூல் செய்துள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சிறுவர்களான பொன்வேல், சேகர்,கலையரசன், திவ்யா துரைசாமி, மலையாள நடிகை நிகிலா விமல் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் இப்படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்துள்ளது.

ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்ட வாழை படத்தை பார்த்த ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தார் இதனை திரையரங்குகளில் வெளியிடலாம் என ஆலோசனை கூறிய பின் பரிசோதனை முயற்சியில் சுமார் 130 திரைகளில் மட்டுமே முதல் நாள் திரையிடப்பட்டது.

வெளியீட்டுக்கு முன்பாக திரைக்கலைஞர்கள், இயக்குநர்களுக்காக வாழை படத்தின் பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. அவர்கள் வாழைபடம் பற்றி வெளியிட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் பட வெளியீட்டுக்கு முன்னதாகவே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதன் விளைவாக நகர்புற திரையரங்குகளில் முன்பதிவில் படத்திற்கான 60% டிக்கட்டுகள் விற்பனையானது. குறைவான திரையரங்குகள், குறைவான காட்சிகள் என வெளியான வாழை படத்திற்கு இரண்டாவது நாளே காட்சிகள் அதிகரிக்கப்பட்டு வசூலும் இருமடங்கு ஆனது.

இந்த வருடம் இது வரை வெளியான எந்தவொரு குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட எந்தவொரு தமிழ் படமும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இராமானுஜம்

”ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத என்னை பற்றி பேச எடப்பாடிக்கு எந்த தகுதியும் கிடையாது” : அண்ணாமலை ஆவேசம்!

பழுதடைந்த அரசுப் பள்ளி கட்டடங்கள்: அறிக்கை சமர்ப்பிக்க கல்வித்துறை உத்தரவு!

Comments

Popular posts from this blog

மகன் திருமணம்: ரூ.2.5 கோடியில் புதிய கார் வாங்கிய நாகர்ஜூனா

தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும். நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி...

"பாடகி சுசித்ரா மனநோயாளி": மறைமுகமாக சாடிய வைரமுத்து

மலையாள சினிமா போல தமிழ் திரையுலகிலும் ஏராளமான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் குற்றச்சாட்டை முன்வைத்தார். குறிப்பாக கவிஞர் வைரமுத்து மீது சுசித்ரா கூறிய  புகார்கள் கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வைரமுத்து குறித்து சுசித்ரா கூறியதாவது, ''மே மாசம் 98-ல் மேஜர் ஆனேன் பாடலை பாடியபோது கவிஞர் வைரமுத்து தனக்கு  போன் செய்தார். உங்கள் வாய்ஸ்ல ஒரு காமம் இருக்குமா , அதைக்கேட்டால் காதல் வருதும்மா என்று கூறினார். பின்னர், ஒருமுறை பரிசு கொடுக்க வேண்டும் என்று என்னை வீட்டுக்கு அழைத்தார்.  நான் எனது  பாட்டியுடன் வந்ததை பார்த்ததும் நீங்க தனியா வருவீங்கனு நினைச்சேன் என்று வைரமுத்து சொன்னார். அப்போது, அவரிடத்தில்  ஏதோ பரிசு தரப்போகிறேன்னு சொன்னீர்களே என்று நான் கேட்டேன்.  இந்த கேள்வியை எதிர்பார்க்காத அவர்,   வீட்டில் இருந்து இரண்டு ஷாம்பூ பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்'' என்று தெரிவித்திருந்தார். வாழ்வியல் தோல்விகளாலும் பலவீனமான இதயத்தாலும் நிறைவேறாத ஆசைகளாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி அதன் உ...

’கூலி’யில் ஒலித்த 2 சூப்பர்ஹிட் விண்டேஜ் பாடல்கள்... பின்னணி என்ன தெரியுமா?

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்திலும் வழக்கம்போல 2 விண்டேஜ் பாடல்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தியுள்ளது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அதன்பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களின் வெற்றியால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் தான் அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஆமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா ஆகியோர் இணைந்து நடித்துள்ள ’கூலி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் எழும். அதிலும் குறிப்பாக அவர் தனது படங்களில் பயன்படுத்தும் விண்டேஜ் பாடல்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். குறிப்பாக லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படமான கைதி படத்தில் ’ஜும்பலகா ஜும்பலகா’ மற்றும் ’ஆசை அதிகாம் வச்சு’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில், அமரன் படத்தில் வரும் ‘வெத்தல போட்ட சோக்குல’ மற்றும் புது நெல்லு புது நாடு படத்தில் வரும் ’கருத்த மச்சான்’ ஆகிய பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. லோகேஷ் தனது அபிமான நடிகரான...